
PG TRB - தமிழ் - தேர்வு 6
(ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை
தமிழ்ப் பாடப்புத்தக வினாக்கள்)
இதற்கான PDF இந்த விடைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
1.
சித்திர எழுத்து என்பது
அ) Epigraph
ஆ) Drawing word
இ) Pictograph
ஈ) Special
word
2.
பாரதியார் நடத்திய
இதழ்
அ) விஜயா
ஆ) சுதேசிமித்திரன்
இ) யங் இந்தியா
ஈ) விவேகபானு
3. ”தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்
--------------
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்” – என்ற பாடலின் ஆசிரியர்.
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) கவிஞர்
காசி ஆனந்தன்
இ) பாரதிதாசன்
ஈ) பெருஞ்சித்திரனார்
4.
தமிழ்க்கும்மி பாடியவர்
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) கவிஞர் காசி ஆனந்தன்
இ) பாரதிதாசன்
ஈ) பெருஞ்சித்திரனார்
5.
கீழ்வருவனவற்றுள்
பெருஞ்சித்திரனாரோடு பொருந்தாதது எது?
அ) தென்மொழி
ஆ) தமிழ்ச்சிட்டு
இ) ஞானக்கும்மி
ஈ) தமிழ்நிலம்
6.
பெருஞ்சித்திரனாரின்
இயற்பெயர்
அ) இராசகோபாலன்
ஆ) மாணிக்கம்
இ) மாரிமுத்து
ஈ) சுப்பிரமணி
7.
மேதினி என்பதன் பொருள்
அ) மேகம்
ஆ) கடல்
இ) உலகம்
ஈ) ஊழி
8.
பாவலரேறு என்பது யாருடைய
சிறப்புப்பெயர்
அ) வாணிதாசன்
ஆ) தேவநேய பாவாணர்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) பரிதிமாற்கலைஞர்
9.
சரியாகப் பொருந்தியுள்ளதைத்
தேர்ந்தெடுக்க.
அ) கனிச்சாறு - பாரதிதாசன்
ஆ) கொய்யாக்கனி -
பெருஞ்சித்திரனார்
இ) பாவியக்கொத்து - கவிமணி
ஈ) நூறாசிரியம் - நாமக்கல் கவிஞர்
10. ”தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!” – என்ற பாடல் அடிகள்
யாருடையது.
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) பெருஞ்சித்திரனார்
11. "என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழ்த்தாயின்
தொன்மையைப் பாடியவர்.
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) பெருஞ்சித்திரனார்
12. எழுத்துகள்
பெரும்பாலும் --------- எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
அ) வலஞ்சுழி
ஆ) இடஞ்சுழி
இ) வட்டெழுத்து
ஈ) கிரந்த எழுத்து
13. பொருத்துக.
அ) தமிழன் கண்டாய் - 1) சிலப்பதிகாரம்
ஆ) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - 2) அப்பர் தேவாரம்
இ) இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் - 3) தொல்காப்பியம்
ஈ) இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ - 4) பிங்கல நிகண்டு
அ) அ-3, ஆ-2, இ-4, ஈ-1
ஆ) அ-2, ஆ-3, இ-4, ஈ-1
இ) அ-2, ஆ-3, இ-1, ஈ-4
ஈ) அ-3, ஆ-4, இ-1, ஈ-2
14.
கமுகு தாவரத்தின்
இலைப்பெயர்
அ) தோகை
ஆ) தாள்
இ) மடல்
ஈ) கூந்தல்
15. போர்க்களத்தில் மார்பில்
புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இதில் இடம்பெறுகிறது.
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) நற்றிணை
ஈ) கலித்தொகை
16.
சுறாமீன் தாக்கியதால்
ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த
செய்தி இடம்பெறும் நூல்
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) நற்றிணை
ஈ) கலித்தொகை
17.
தொலைவில் உள்ள பொருளின்
உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவிய அறிஞர் கலிலீயோ. இதனைத் திருவள்ளுவமாலையில் ”தினையளவு போதாச் சிறுபுல்நீர்
நீண்ட பனையளவு காட்டும்” என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்திக் காட்டியவர்.
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) நக்கீரர்
ஈ) ஔவையார்
18.
ஆய்த எழுத்தை ஒலிக்க
ஆகும் கால அளவு
அ) கால் மாத்திரை
ஆ) அரை மாத்திரை
இ) ஒரு மாத்திரை
ஈ) இரண்டு மாத்திரை
19.
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
அ) வலஞ்சுழி - Clock wise
ஆ) இடஞ்சுழி - Anti Clock wise
இ) குரல்தேடல் - Speech Search
ஈ) தேடுபொறி - Search engine
20. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்
அ) கவிமணி தேசிக விநாயகம்
ஆ) பாரதியார்
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) பாரதிதாசன்
அருமையான வினா விடைகள் நன்றி.
பதிலளிநீக்குகருத்துரையிடுக