PG TRB - தமிழ் - தேர்வு 4
1. திராவிட மொழிகளுள்
மூத்த மொழியாக இலங்குவது
அ) தமிழ்
ஆ) தெலுங்கு
இ) கன்னடம்
ஈ) துளு
2. திராவிட மொழிகளைத்
திருந்திய மொழிகள் என்றும் திருந்தாத மொழிகள் என்றும் இருவகையாகப் பாகுபாடு
செய்தவர்
அ) ஹிராஸ்
பாதிரியார்
ஆ) வீரமாமுனிவர்
இ) சாட்டர்ஜி
ஈ) கால்டுவெல்
3. இந்தியாவில்
பேசப்படும் மொழிக்குடும்பங்களின் எண்ணிக்கை
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
4. தெலுங்கர்களும்
கன்னடர்களும் தமிழை எவ்வாறு அழைத்தனர்
அ) வடுகர்
ஆ) திராவிடர்
இ) அரவர்
ஈ) நாகரிகமற்றவர்
5. திராவிட மொழிக்
குடும்பங்களை எத்தனை பிரிவாகப் பிரிப்பர்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
6. ரிக்வேத ஐத்ரேய
பிராமணம் என்ற வடநூல் ஆந்திரரை என்னவென்று கூறுகிறது.
அ) வடுகர்
ஆ) அரவர்
இ) நாகரிகமற்றவர்
ஈ) தெலுங்கர்
7. எந்த நாட்டின்
பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.
அ) தென் ஆப்பிரிகா
ஆ) கனடா
இ) மொரிசியஸ்
ஈ) சிங்கப்பூர்
8. பழந்தமிழ்
இலக்கியம் ஆந்திரரை எவ்வாறு அழைத்தது.
அ) வடுகர்
ஆ) நாகரிகமற்றவர்
இ) அரவர்
ஈ) ஆந்திரர்
9. “வடவேங்கடம்
தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து..” என்று கூறியவர்.
அ) தொல்காப்பியர்
ஆ) இளங்கோவடிகள்
இ) பனம்பாரனார்
ஈ) பவணந்தி முனிவர்
10. தெலுங்கு
மொழியின் முதல் புலவராக அறியப்படுபவர் யார்?
அ) தொல்காப்பியர்
ஆ) குமாரில பட்டர்
இ) நன்னயப் பட்டர்
ஈ) பனம்பாரனார்
11. இடத்திற்கேற்ப
கேர்வாரி, கூர்க்கூ, ஜுவாங், சவாரா, கட்பா என எம்மொழி பலவகைப் பெயர்களில்
வழங்குகின்றன.
அ) கூயி
ஆ) முண்டா
இ) கோலாமி
ஈ) கோண்ட்
12. “கருநாடகம்
என்பது கரு நாடு அகம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே” என்று கூறியவர்.
அ) கால்டுவெல்
ஆ) குண்டர்ட்
இ) ஹீராஸ்
பாதிரியார்
ஈ) பாட்ஸ்க்
13. ‘ஹள கன்னடம்‘
என்பதன் பொருள்
அ) கருநாடகம்
ஆ) புது கன்னடம்
இ) பழைய கன்னடம்
ஈ) ஹொச கன்னடம்
14. உயர்திணை, அஃறிணை
என்ற திணைப்பாகுபாடு இல்லாத மொழி
அ) துளு
ஆ) மலையாளம்
இ) முண்டா
இ) குரூக்
15. திராவிட
மொழிகளில் வினைகளில் உள்ள பால் காட்டும் விகுதிகள் எம்மொழியில் இல்லை.
அ) மலையாளம்
ஆ) கன்னடம்
இ) தெலுங்கு
ஈ) துளு
16. நடு
இந்தியாவிலும் வங்காளத்திலும் ஆசியச் சார்பு குறைந்த மொழிகள் வேறு சில உள்ளன.
அவற்றை முண்டா மொழிகள் என்று கூறுவர். இவரே இவற்றை முண்டா மொழிகள் என்று பெயரிட்டு
வழங்கினார்.
அ) ஹாட்ஜ்ஸன்
ஆ) மாக்ஸ் முல்லர்
இ) கால்டுவெல்
ஈ) மேஜர் சொல்
17. தமிழோடு ஒத்த
இனமொழி என்று கொள்வதைவிட, தமிழின் கிளைமொழி என்று கொள்வது பொருந்தும் எனக்
கருதியவர் கால்டுவெல். அவர் கருதிய மொழி எது?
அ) குடகு
ஆ) துளு
இ) மலையாளம்
ஈ) தோடா
18. “ஒரு
மொழியிலிருந்து இன்னொரு மொழி பிறப்பதில்லை என்பதும், மொழியியலில் தாய்மகள்
என்றெல்லாம் பேசுவதில் பொருளில்லை” என்பது யாருடைய கருத்து.
அ) வெண்ட்ரியே
ஆ) கால்டுவெல்
இ) மோக்லிங்
ஈ) மேஜர் சொல்
19. முண்டா மொழிகளை
எவ்வாறு அழைப்பர்.
அ) திபேத்திய
மொழிகள்
ஆ) கோலேரிய மொழிகள்
இ) திராவிட மொழிகள்
ஈ) ஆரிய மொழிகள்
20. முண்டா மொழிகளைத்
தமிழினம் என்றும் கூறியவர்.
அ) மாக்ஸ் முல்லர்
ஆ) மேஜர் சொல்
இ) பாட்ஸ்க்
ஈ) ஹாட்ஜ்ஸன்
21. மொஹெஞ்சதாரோ
நாகரிகத்தின் மக்கள் பேசின அந்தப் பழைய மொழியைத் திராவிட மொழி என்று கூறாமல் பழந்திராவிட
மொழி என்று கூறுவதே பொருந்தும் என்று கூறியவர்
அ) ஹீராஸ் பாதிரியார்
ஆ) கால்டுவெல்
இ) சாட்டர்ஜி
ஈ) தீட்சிதர்
22. திராவிட
மொழிகளில் உள்ள தன்மை ஒருமைப் பெயரான யான், ஞான், நான், நா, என் என்னும் வடிவங்களை
எந்தெந்த மொழிகளின் வடிவங்களோடு கால்டுவெல் ஒப்பிடுகிறார்.
அ) முண்டா,
தெலுங்கு, சீனம்
ஆ) சீனம், முண்டா,
ஆஸ்திரேலியா
இ) சீனம், ஆஸ்திரேலியா,
திபேத்தியம்
ஈ) திபேத்தியம், ஆஸ்திரேலியா,
முண்டா
23. பின்வருவனவற்றுள்
திராவிட மொழிக்குடும்பங்களுள் கால்டுவெல் சேர்க்காது மொழி எது?
அ) துதம்
ஆ) பிராகூய்
இ) கோண்டு
ஈ) கந்தம்
24. மலையாளத்தின்
முதல் இலக்கியமாக அரியப்படுவது.
அ) கவிராஜமார்க்கம்
ஆ) லீலாதிலகம்
இ) இராமசரிதம்
ஈ) சம்பு இலக்கியம்
25. துளு மொழிக்கு
முதன்முதலாக இலக்கணம் எழுதியவர்
அ) மோக்லிங்
ஆ) ஹாட்ஜ்ஸன்
இ) மேஜர் சொல்
ஈ) பிரிகெல்
26. டாக்டர் மோக்லிங்
என்னும் ஜெர்மனி அறிஞர் ஆராய்ந்த மொழி எது?
அ) துளு
ஆ) குடகு
இ) தோடா
ஈ) கோதா
27. குடகு மொழிக்கு
இலக்கணம் எழுதியவர்
அ) மேஜர் சொல்
ஆ) பிரிகெல்
இ) மோக்லிங்
ஈ) பாட்ஸ்க்
28. கன்னடத்தின்
கொச்சைக் கிளைமொழியாக அறியப்படுவது.
அ) குடகு
ஆ) துளு
இ) படகா
ஈ) கோதா
29. பாட்ஸ்க் என்னும்
பாதிரியார் எந்த மொழிக்கு இலக்கணம் எழுதியுள்ளார்.
அ) கோலாமி
ஆ) ஒரொவன்
இ) படகா
ஈ) பார்ஜி
30. பிராகூய்,
மால்டா, கோலாமி போன்ற மொழிகள் எந்த ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி
திராவிட மொழிகளோடு வைத்து கணக்கிடப்பட்டன.
அ) 1911
ஆ) 1921
இ) 1941
ஈ) 1951
அற்புதமான பதிவு அய்யா மிக்க நன்றி வாழ்க தமிழ்
பதிலளிநீக்குகருத்துரையிடுக