PG TRB - தமிழ் - தேர்வு 5
1. 1786ஆம் ஆண்டு சமஸ்கிருதம் இந்தோ
– ஐரோப்பிய மொழிக்குடும்பத்தோடு தொடர்புடையது என நிலைநாட்டியவர்.
அ)
கால்டுவெல்
ஆ) சர் ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன்
இ) சர் வில்லியம்
ஜோன்ஸ்
ஈ) சட்டர்ஜி
2. கால்டுவெல்
குறிப்பிட்ட 12 திராவிட மொழிகளோடு எந்த இரண்டு மொழிகளைச்
சேர்த்து கிரியர்ஸன் திராவிட மொழிகள் 14 எனக் குறிப்பிடுகிறார்.
அ) பிராகூய்,
கோலாமி
ஆ) கோலாமி, நாயக்கி
இ) நாயக்கி,
பர்ஜி
ஈ) பர்ஜி,
பெங்கோ
3. ‘தந்திர வார்த்திகா‘ என்ற நூலினை எழுதியவர்.
அ) பனம்பாரனார்
ஆ) பாணினி
இ) காளிதாஸ்
ஈ) குமரிலபட்டர்
4. ‘திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு‘ என்னும் நூலை
1946 ஆம் ஆண்டு வெளியிட்டவர்
அ)
லெட்சுமாஜி
ஆ) யூல்ஸ் பிளாக்
இ)
ஸ்டென்கனோவ்
ஈ)
எமனோ
5.
1961
ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எண்ணிக்கை
அ)
574
ஆ)
872
இ) 1652
ஈ)
2796
6.
1961
ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திராவிட மொழிக்குடும்பத்தில் ----- மொழிகள் உள்ளதாக இக்கணக்கெடுப்பு
தெரிவித்துள்ளது.
அ)
23
ஆ)
28
இ) 153
ஈ)
226
7.
ஆங்கிலம்
போன்ற மொழிகளில் பெரும்பாலும் சொற்கள் எந்த எழுத்தைக் கொண்டு முடிகின்றன.
அ) மெய்யெழுத்து
ஆ)
உயிரெழுத்து
இ)
ஆய்த எழுத்து
ஈ)
குற்றியலுகர எழுத்து
8.
திராவிட
மொழிகளைத் தமிழ்த் தொகுதி, தெலுங்குத் தொகுதி என்று இரண்டாகப் பிரித்தவர்.
அ) லெட்சுமாஜி
ஆ) யூல்ஸ் பிளாக்
இ) ஸ்டென்கனோவ்
ஈ) எமனோ
9.
துளு
மொழி ஏனைய தென்திராவிட மொழிகளிலிருந்து வேறுபடுவதால் அதை நடுதிராவிட மொழிகளோடு சேர்த்தல்
வேண்டும் என்று வலியுறுதியவர்.
அ) பி.எஸ்.சுப்பிரமணியம்
ஆ) பி.எச்.கிருஷ்ணமூர்த்தி
இ) ஆர்.ஈ.ராபர்ட்
ஈ) லெட்சுமாஜி
10.
தென்திராவிட
மொழிகளுள் எந்த மொழி கன்னடத்தின் கிளைமொழியாக உள்ளது.
அ)
குடகு
ஆ)
துளு
இ) படகா
ஈ)
தோடா
11.
எந்தத்
திராவிட மொழிகளில் பெண்பால் ஒருமையும் அஃறிணை ஒன்றன்பாலும் ஒரே மாதிரி அமையாமல் தனித்தனியே
உள்ளது.
அ) தென்திராவிட
மொழிகள்
ஆ) நடுதிராவிட மொழிகள்
இ) வடதிராவிட மொழிகள்
ஈ) அனைத்திலும்
12.
தமிழ்,
மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் இகர, உகர ஒலிகள் முறையே எகர, ஒகர ஒலிகளாக எந்த மொழிகளில்
மாற்றம் பெறுகிது.
அ) படகா, கன்னடம்
ஆ)குடகு, கன்னடம்
இ) கன்னடம்,
தெலுங்கு
ஈ) தெலுங்கு, துளு
13.
தென்திராவிட
மொழிகளில் மட்டுமே காணப்படும் வியங்கோள் வினைமுற்று விகுதி எது?
அ) க
ஆ) இய
இ) இயர்
ஈ) இவை அனைத்தும்
14.
கேரள
நாட்டு மன்னனைப் பிளினி எவ்வாறு குறிப்பிடுகிறார்.
அ) கேரளபுத்திரா
ஆ) செலபத்ராஸ்
இ) கெரபத்ராஸ்
ஈ) மலையாளி
15.
மலையாள
மொழிக்கு இலக்கணமும் அகராதியும் எழுதியவர்
அ) குண்டர்ட்
ஆ) பெர்னாட் ஸ்கிமிட்
இ) உபாத்தியாயா
ஈ) ஏ.மான்னர்
16.
கௌடா
கன்னடத்தில் காணப்படும் உயிர் ஒலிகளின் எண்ணிக்கை
அ) 10
ஆ) 12
இ) 14
ஈ) 15
17.
துளு
மொழிக்குப் பேரகராதி ஒன்றைத் தயாரித்து வெளியிட்டவர்
அ) கே. குஷலப்பா
ஆ) ஜே.பிரிகல்
இ) எல்.வி.இராமசுவாமி
ஈ) உபாத்தியாயா
18.
ஒரு
பெண் பல ஆடவர்களை மணந்து கொள்ளும் வழக்கம் இவர்களிடம் உள்ளதாக ஏ.சி.பர்னல் என்பவர்
குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் மொழி எது?
அ) படகா
ஆ) துளு
இ) குடகு
ஈ) தோடா
19.
sh,
ch, th முதலிய ஒலிகள் தோடா மொழியில் ஒலி நயத்திற்காகச் சொற்களின் இடையில் வருகின்றன.
இவ்வொலிகள் தோடா மொழிக்கே உரிய தனிச் சிறப்பாகும் என்று கூறியவர்.
அ) கால்டுவெல்
ஆ) ஜி.யு.போப்
இ) கிரியர்ஸன்
ஈ) கமில் சுவலபில்
20. எம்மொழிகளில் ஆண்பால், ஆண்பால் அல்லாதன என்ற இருவகைப் பாகுபாட்டினை
ஒருமையிலும் பன்மையிலும் காணமுடிகிறது.
அ) தென்திராவிட மொழிகள்
ஆ) நடுதிராவிட
மொழிகள்
இ) வடதிராவிட மொழிகள்
ஈ) முண்டா மொழிகள்
கருத்துரையிடுக